நீண்ட கால விடுப்பு அளவு
1. 5 ஆண்டு  பணியினை முடித்திராத நிரந்தர மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தகுதிகாண் பருவத்தினருக்கு தொடர்ந்து 6 திங்கள் வரை விடுப்பு வழங்கப்படும். (அ.நி.எண். 1045  ப.ம.நி.சீ.துறை  நாள் 13.11.87)

2. 5 ஆண்டு  பணியினை முடித்துள்ள  நிரந்தர மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தகுதிகாண் பருவத்தினருக்கு தொடர்ந்து 1 வருடம்  வரை விடுப்பு அனுமதிக்கப்படும். (அ.நி.எண். 477  ப.ம.நி.சீ.துறை  நாள் 21.11.90)

3. சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் 6  அல்லது 12  திங்களுக்கு மேற்பட்டு விடுப்பில் இருப்பின் அரசின் பரிந்துரையின் பேரில் அதிகமாக அனுபவிக்கும் விடுப்பு காலம் Non Duty எனக் கருதப்படும்.(மேற்படி அரசாணை)

4. இருப்பினும் மருத்துவம் மற்றும் உயர்கல்வி முதலிய  காரணங்களுக்காக ஐந்து ஆண்டுகள் வரை தொடர்ந்து விடுப்பில் இருக்கலாம். (மேற்படி அரசாணை)
5. மேற்படி ஆறு திங்கள் அல்லது ஓராண்டு தொடர் விடுப்பில் இருந்தவர் பனி ஏற்ற பிறகு மீண்டும் தொடர் விடுப்பு அனுபவிக்க விரும்பினால் மூன்றாண்டு இடைவெளி தேவை. ஆறுமாதம் அல்லது  ஓராண்டுக்கு குறைவாகத் துய்க்கப்படும் விடுப்புக்கு மூன்று ஆண்டு இடைவெளி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. (அரசு க.எண்.44400/ அ.வி. III/89-1 நாள் 7.7.89.)

6. அனுமதிக்கப்பட்ட தொடர் விடுப்பான ஆறு திங்கள் அல்லது ஓராண்டு விடுப்புக்கும் அதிகமாக ஒருவர் விடுப்பில் இருந்தால் அவர் மீது துறை நடவடிக்கை அவசியமாகிறது. அப்படிப்பட்டவர் பனி ஏற்க விரும்பினால்  துறை ஒழுங்கு நடவடிக்கைக்கு குந்தகம் ஏற்படாதவாறு அவரை பணிக்கு அனுமதிக்கலாம். இருப்பினும் துறை ஒழுங்கு நடவடிக்கையின் முடிவினை அவர் ஏற்றாக வேண்டும். அரசு க.எண்.8699/ அ.வி. III/91-5  ப.ம.நி.சீ.துறை  நாள் 8.8.91.)

கருத்துரையிடுக

  © என் பக்கம் செ. அருள்செல்வம் - www.arulselva.blogspot.com Thank you visit again

Back to TOP