சிறப்பு இயலாமை விடுப்பு 
அ) இந்த விடுப்பானது கடைமையாற்றும் போது காயமடைந்து ஊனமுற்ற அரசு அலுவலர்க்கு வழங்கப்படுகிறது. (அ.வி.83 )


ஆ) மருத்துவக்குழுவினர் பரிந்துரையின் பேரில் மட்டுமே வழங்கப்படும்.


இ) இவ்விடுப்புக் காலம் பணிக்காலத்தில் சேர்க்கப்படும்.


ஈ) விபத்து நடந்த மூன்று மாதத்திற்குள் அரசு அலுவலர் ஊனமுற்றது தெளிவாகத் தெரிந்தாலன்றி இவ்விடுப்பு வழங்கப்படமாட்டாது. ஆனால் அரசு திருப்தியடையும் பட்சத்தில் ஊனமுற்றது மூன்று மாதம் கழித்து தெரிந்தாலும் இவ்விடுப்பு வழங்கப்படும்.


உ) மருத்துவக்குழு சான்றிதழின் பேரில் அதிகப்பட்சம் இரு ஆண்டுகள் இவ்விடுப்பு வழங்கப்படும்.


ஊ) முதல் 4  மாதங்களுக்கு முழு ஊதியமும் , மீதி விடுப்பிற்கு 1/2 ஊதியமும் படிகளுடன் வழங்கப்படும். 

எ) தற்காலிக அரசு அலுவலர்களும் இவ்விடுப்பு பெறலாம்.  

கருத்துரையிடுக

  © என் பக்கம் செ. அருள்செல்வம் - www.arulselva.blogspot.com Thank you visit again

Back to TOP