05.01.2012 தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை முழக்க போராட்டம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கோரிக்கை முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கமலநாதன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் துரை, கூடுதல் தலைவர் சேகர் , துணைசெயலாளர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி வரவேற்றார். துணை செயலாளர் செல்வகுமார் , வட்டார செயலாளர்கள் சண்முகசுந்தரம் , துளசிராஜ், செந்தாமரைக்கண்ணன், வைத்தியநாதன், அந்தோணி ஞானராஜ், தர்மதுரை, முருகேசன், ஆகியோர் பேசினர். இதில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளில் கூடுதல் தலைமை ஆசிரியர்களாக நியமித்து பணிப்பாதுகாப்பு, ஊதியப்பாதுகாப்பு அளித்து தொடக்கக்கல்வியில் உள்ள ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் ஆகியோரின் பதவி உயர்வு , ஊதியப்பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். விருப்பத்தின் அடிப்படையில் நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களை உயர்நிலைப்பள்ளிக்கு மாற்றம் அளிக்க வேண்டும். சேமிப்பு நிதி கணக்கை தலைமை கணக்காயரிடம் ஒப்படைத்து நிர்வகிக்க வேண்டும். உயர்நிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்வதில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. பின்னர் கோரிக்கை சம்பந்தமான மனுவை கலெக்டரிடம் நிர்வாகிகள் அளித்தனர். இதில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கலியபெருமாள் நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

  © என் பக்கம் செ. அருள்செல்வம் - www.arulselva.blogspot.com Thank you visit again

Back to TOP