அலைகள் -இலக்கிய அமைப்பு

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 
கீழ்வேளூர் வட்டாரம் 
அலைகள் -இலக்கிய அமைப்பு 
ஐயா பேசினார்...
கூட்டம் சிலித்தது.
ஐயா முழக்கமிட்டார்...
கூட்டம்  ஆர்ப்பரித்தது. 
ஐயா இருமினார்...
கூட்டம் பதைபதைத்தது.
...
ஐயா ரிடையர் ஆனார்...
கூட்டம் மறந்து போனது.
செ. அருள்செல்வம்.  
துணைச் செயலர் 
........................................................................
பாட்டன்
குழி வெட்டி,
நீர்  பாய்ச்சி,
வியர்வை சிந்திய மரத்தருகில்
பேரனால்
செய்ய முடிந்தது,
வியர்வை வெளியேற
ஜாக்கிங்  மட்டும்தான்.
சி. ஸ்ரீதேவி 
மகளிரணி
  ........................................................................
அலங்காரங்களுடன் நான்.
மணப்பெண் தோழியை 
இன்னும் எத்தனை நாட்கள்...?
அப்பா வரன் பார்க்கிறார்.
அடுத்த வாரம்
வந்து விடுவாளாம்...
என் சித்தி. 
இரா.சத்யகலா. 
மகளிரணி 
  ........................................................................
சாலையின் ஓரத்தில்
சேலையை கணுக்காலளவு 
உயர்த்தி 
தலையை நனைய விட்டு 
குடையை கேடயமாக்கி
பிடிக்கும் போது...
சேற்றை வாரி இறைக்காமலேயே
சென்று விடுகிறது 
பேருந்து. 
-ப.பாலகுமார்.
இளைஞரணி
  ........................................................................
 




கருத்துரையிடுக

  © என் பக்கம் செ. அருள்செல்வம் - www.arulselva.blogspot.com Thank you visit again

Back to TOP