SASTRA B.Ed Judgement


தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அஞ்சல் வழி பி.எட். படிப்பு நடத்தி வருகிறது. அரசு பள்ளி களில் இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றும் சுமார் 500 ஆசிரியர்கள் சேர்ந்து படித்து பட்டம் பெற்றனர். அஞ்சல் வழி பட்டத்துக்கு பதவி உயர்வு சலுகை வழங்க முடியாது என தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து 500 ஆசிரியர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை நீதிபதி வினோத் குமார் சர்மா விசாரித்து, அஞ்சல் வழியில் பி.எட். பட்டப் படிப்பு நடத்த சாஸ்த்ரா பல்கலைக்கு மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அங்கீகாரம் வழங்கியுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழுவும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனவே சாஸ்த்ரா பல்கலையில் அஞ்சல் வழியில் பி.எட். படித்த 500 ஆசிரியர்களுக்கு அனைத்து சலு கைகளும் வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டார்.
நன்றி - தீக்கதிர்

கருத்துரையிடுக

  © என் பக்கம் செ. அருள்செல்வம் - www.arulselva.blogspot.com Thank you visit again

Back to TOP