01.06.2006 seniority

           01.06.2006 இல் பணிவரன்முறை செய்யப்பட ஆசிரியர்களை பொறுத்தவரை அரசாணை 120 நாள் 18.07.2006 இன் படி "இன ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட மூதுரிமையே ஆகும். வேலைவாய்ப்பகம் மூலம் நியமனம் பெற்ற ஆசிரியர்களை பொறுத்தவரை ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட மூதுரிமையே ஆகும். "
           தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண் 36679/டி3/2008 நாள் 18.12.2008 இன் படி  ஆசிரியர் தேர்வு வாரியத்தால்  நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் தர எண் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்படாததால் அவர்கள் ஒன்றியத்தில் சேர்ந்த தேதியின்படி முன்னுரிமை நிர்ணயம் செய்யப்படவேண்டும். அவ்வாறு நிர்ணயம் போது 01.06.2006 அன்று முறையான ஊதிய விகிதத்தில் உட்படுத்தப்பட்ட நிலையில் அனைவரும் 01.06.2006 அன்று பணியில் சேர்ந்ததாக கொண்டு , முதலில் 01.06.2006 க்கு முன்னர் உள்ள பணிக்காலத்தின் அடிப்படையில் (Relative Service) முன்னுரிமை நிர்ணயம் செய்ய வேண்டும். பணிக்காலம் ஒன்றாக இருக்குமானால் பிறந்த தேதி  அடிப்படையிலும் பிறந்த தேதி ஒன்றாக இருக்குமானால் பெயர் அகர வரிசை (Alphabetical) அடிப்படையிலும் முன்னுரிமை நிர்ணயம் செய்ய வேண்டும்.
             எனினும் இந்த கடிதத்திலும் 01.06.2006 இடைநிலை ஆசிரியர் முன்னுரிமை குறித்து திருத்தம் வெளியிடப்பவில்லை.
           அரசாணை 120 நாள் 18.07.2006 க்கு இதுவரை திருத்தம் வெளியிடப்படாதநிலையில்  01.06.2006 இல் பணிவரன்முறை செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை பொறுத்தவரை மேற்க்கண்ட முறையில் மட்டுமே மூதுரிமை பின்பற்றப்படவேண்டும்.
            எனினும் பல்வேறு ஒன்றியங்களில் "சார்ந்த பதவியில் சேர்ந்த தேதியின்" அடிப்படையில் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
             இந்த  "சார்ந்த பதவியில் சேர்ந்த தேதியின்" முறை  இன்றுவரை  1995 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்களுக்கு பின்பற்றப்படாமல்  தர எண்ணின்படி முன்னுரிமை நிர்ணயம். இவர்களைப் போன்றே...
              தனி அரசாணை மூலம் பணிவரன்முறைபடுத்தப்பட்டு தங்கள் மூதுரிமை நிர்ணயித்தலிலும் தனி அரசாணை பெற்றுள்ள   01.06.2006 இடைநிலை ஆசிரியர்கள்   உடனடியாக  தங்கள்  முன்னுரிமை அரசாணை 120 நாள் 18.07.2006 இன் அடிப்படையில் வேலைவாய்ப்பகம் மூலம் ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட மூதுரிமை பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை உடனடியாக பார்த்து இல்லையெனில் உரிய விளக்கம் பெருக. முறையீடு செய்க. 
              ஏனெனில் தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலை பணி விதி
35F இன் படி மூத்தநிலைப்பட்டியலில் தவறுகள் இருப்பின் பணியேற்ற நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் மேல்முறையீடு செய்யவேண்டும். தவறின் நிராகரிக்கப்படும். அலுவலகத் தவறெனின் எப்போதும் சரி செய்யலாம். 

(தகவலுக்காக)
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
கீழ்வேளூர் வட்டாரம் 







கருத்துரையிடுக

  © என் பக்கம் செ. அருள்செல்வம் - www.arulselva.blogspot.com Thank you visit again

Back to TOP