maternity leave

மகப்பேறு விடுப்பு 
 
தகுதிகாண்பருவத்தினர் 
தகுதிகாண்பருவத்தினர் ஓராண்டு பணி முடிப்பதற்கு முன்னரே 90 நாட்கள் மகப்பேறு விடுப்பு  அனுமதிக்கப்படும். அவர் தம் இருப்பில் உள்ள ஈட்டிய விடுப்பு போக மீதம் மகப்பேறு விடுப்பாக வழங்கப்படும். (அ.நி.எண். 138 ப.ம.நி.சீ. துறை நாள் 26.02.83 அ.க.எண்.44189/89-13 ப.ம.நி.சீ. துறை நாள் 16.12.83)

 மகப்பேறு விடுப்பினை விடுப்பு தொடங்கும் நாளிலிருந்து அல்லது மகப்பேறுக்கு  முன்னரோ அல்லது பின்னரோ அல்லது முன்னரும் பின்னரும் 90  நாட்கள் அனுமதிக்கலாம்.

 குழந்தை பிறந்த நாளில் இருந்துதான் அனுபவிக்க வேண்டும் என்ற ஊகம் தவறு.  (ஆ.ஆ.நிலை எண் 237 ப.ம.நி.சீ. துறை நாள் 29.06.93. ப.ம.நி.சீ.(அவி 3 ) கடித எண் 41615/ 95-1 நாள்  13.10.95. 


குழந்தை இறந்து பிறந்தாலும் இவ்விடுப்பு வழங்கலாம்.


நிரந்தர மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தகுதிகான்பருவத்தினர்


அ) 29.06.1993 முதல் இரு உயிருள்ள குழந்தைகளுக்காக மட்டுமே  மகப்பேறு விடுப்பு  அனுமதிக்கப்படுகிறது. மூன்றாவது குழந்தைக்காக இவ்விடுப்பு அனுமதிக்கப்பட மாட்டாது.


ஆ) மருத்துவர் ஆலோசனையின் பேரில் இவ்விடுப்புடன் சேர்த்து ஏனைய பிற விடுப்புகள் ஒரு வருடம் வரை அனுமதிக்கப்படும். (அ.நி.எண். 237 ப.ம.நி.சீ. துறை நாள் 26.06.93)


இ) வேறு ஏதேனும் விடுப்பிலிருக்கும் போது பிரசவம்  ஏற்பட்டால் பிரசவமான தேதியிலிருந்து மகப்பேறு விடுப்பு தொடங்கும். (அ.நி.எண். 138 ப.ம.நி.சீ. துறை நாள் 26.02.83 ) 

தற்காலிக பெண் அலுவலர் 

  ஓராண்டு தொடர் பணியினை முடித்துள்ள தற்காலிக பெண் ஊழியருக்கு அவர் தம் இருப்பில் உள்ள ஈட்டிய விடுப்பு போக மீதி மகப்பேறு விடுப்பாக வழங்கப்படும். (அ.நி.எண். 138 ப.ம.நி.சீ. துறை நாள் 26.02.83 )

  ஓராண்டு பணி  முடிக்காதவராயினும் நிலையான பணியிடத்தில் பணியாற்றும் ஆசிரியைக்கு மகப்பேறு விடுப்பு கிடைக்கும். ( தொடக்கக் கல்வி இயக்குனரின் ஆணை 60054/ இ.டி.டி /96 நாள் 9.1.96 




கருத்துரையிடுக

  © என் பக்கம் செ. அருள்செல்வம் - www.arulselva.blogspot.com Thank you visit again

Back to TOP