probationary


தகுதிகாண் பருவம் 
1. ஒருவர் நிரந்தரமாக பணியமர்த்தப்படும் நாளில் இருந்துபழகு நிலை துவங்குகிறது. இதனை நிறைவு செய்பவர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்.
2. தகுதிகாண் பருவமானது பதவிகளின் தன்மையைப் பொறுத்து இரண்டாண்டு காலத்தொடரில் ஓர் ஆண்டு அல்லது மூன்றாண்டு காலத்தொடரில் இரு ஆண்டுகள் என இருக்கும்.
3. கடுமையான குற்றச்சாட்டுகளின் மீது நடவடிக்கைகள் நிலுவையிலிருப்பின் பழகு நிலை நிறைவு குறித்து தாமதப்படுத்தும் ஆணையை உரிய அலுவலர் வெளியிட வேண்டும்.


4. பணிக்காலமே தகுதி காண் காலமாகக் கொள்ளப்படும். சிறுவிடுப்புத் தவிர்த்து பிற அரசு விடுமுறைகள் அல்லாத விடுமுறைகளும் பிற விடுப்புகளும் (ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு) போன்றவை பழகு நிலையில் பணிக்காலமாக கொள்ளப்படமாட்டாது. பழகு நிலைக் காலத்தில் மேற்கூறியவாறு விடுப்புகளை எடுத்தால் பழகுநிளைக்காலம் விடுப்பு எடுத்த அளவிற்கு தள்ளி போகும். 
 இவை தவிர 
  (அ)  பழகு நிலைக் காலத்தில் எடுக்கப்படும் பணியேற்பிடைக்   காலமும் 
  (ஆ) விடுப்புடன் இணைக்கப்படும் முன்,பின் அரசு விடுமுறை நாட்கள் அல்லது பதில் விடுப்பு போன்றவைகளும் பழகுநிலைக் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாத காலமாகும்.  

5. தற்காலிக பதவி உயர்வு, மற்றும் மேல்நிலை பதவியில் ஆற்றும் பணிக்காலமும் கீழ்நிலைப் பணியின் பழகுநிலைக்குகணக்கில் கொள்ளப்படும்.


6. பழகுநிலையில் இருப்பவருக்கு தற்காலிகமாய் பதவி உயர்வு அளிக்கப் படலாம். ஆனால் பதவி உயர்வுக்கு முன் இருந்த கீழ்நிலைப் பதவியில் பழகுநிலையை முடித்த பின்னரே உயர்நிலைப் பதவியில் பணி ஒழுங்கு படுத்தப்படும்.

7. ஒரு பணியில் பழகுநிலை முடித்தவர் அதே பணியில் பதவி உயர்வு செய்யப்பட்டால் மீண்டும் பழகுநிலை முடிக்கத் தேவையில்லை.

8. அலுவலக மெத்தனம் காரணமாக பழகுநிலை தாமதமாக நிறைவு செய்யப்படுமாயின் ஊதிய உயர்வு நிலுவையுடன் வழங்கப்படும். (Rule 23-A T.N.S.S.S.R)


9. பழகுநிலைக்காலத்தில் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படும் காலங்கள்:
   அ) பணிக்காலம், சிறுவிடுப்பு, ஈடுகட்டும் விடுப்பு, அரசு விடுமுறைகள்,
  ஆ) விடுமுறையுடன் தொடர்ந்து பணியேற்பு காலம் (Rule 3 Annex. F.R) 
  ஆ) பழகுநிலைக் காலத்தில் பயிற்சி பெறும் காலம். (G.O. Ms. No.610 P &A.R. DT. 28.6.82)
 
       

கருத்துரையிடுக

  © என் பக்கம் செ. அருள்செல்வம் - www.arulselva.blogspot.com Thank you visit again

Back to TOP