சொந்த பணிக்கான ஈட்டா விடுப்பு (T.N.L.R 13. 14)
1. சொந்த பணிக்கான ஈட்டா விடுப்பினை அங்கீகரிக்கப்பட்ட தகுதிகான் பருவத்தினரும் நிரந்தர பணியில் உள்ளோரும் அனுபவிக்கலாம்.

2. பணிக்காலத்தில் இவ்விடுப்பினை 180  நாட்கள் அனுபவிக்கலாம். ஆனால் ஒரே சமயத்தில் 90  நாட்கள் வரை தான் அனுபவிக்க வேண்டும்.


3. இவ்விடுப்பினை ஈட்டிய விடுப்புடன் சேர்த்து அனுபவிக்கலாம். ஆனால் இச்சமயத்தில் இரண்டும் சேர்ந்து 180  நாட்களுக்கு மிகக் கூடாது.

4 . இவ்விடுப்பு காலத்தில் அடிப்படை ஊதியத்தில் 50  விழுக்காடும் படிகள் முழுமையாகவும் கிட்டும்.

5 .  பணி நிறைவு / விருப்பப் பணித்துறவு ஆகிய காலங்களில் இருப்பிலுள்ள மொத்த விடுப்பு நாட்களில் பாதியளவு நாட்களை (50%) ஒப்படைப்பு செய்து தொகையாக பெறலாம். (அதிக அளவு 90  நாட்கள் வரை)

6 .  இவ்விடுப்பைக் கணக்கிடும் போது வரும் குறைநாளினை (Fraction) ஒரு முழு நாளாக  கணக்கில் சேர்த்து கொள்ள வேண்டும்.


கருத்துரையிடுக

  © என் பக்கம் செ. அருள்செல்வம் - www.arulselva.blogspot.com Thank you visit again

Back to TOP