Earned Leave

ஈட்டிய விடுப்பு
 அனைத்து வகை நிர்வாகத்தின் கீழுள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 17  நாட்களும் கல்லூரி ஆசிரியர்களுக்கு 15  நாட்களும் ஈட்டிய விடுப்பு அனுமதிக்கப்படும். (அரசு ஆணை எண். 522 EST நாள் 6.8.96)

 அதிகபட்சம் 240 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை சேமித்து வைக்கலாம். (G.O.Ms.No.999 P & A.R Dt 30.10.87)


 தகுதிகாண் பருவத்திலுள்ள ஈட்டிய விடுப்பு எடுத்தால் அந்த அளவுக்கு தகுதிகாண் பருவமும் தள்ளிப் போகும். 

 தற்காலிகப் பணியினர் மற்றும் பழகுநிளையினருக்கு அவர்கள் பணிவிலக்கம் செய்யப்படும் போது அவர்கள் கணக்கில் உள்ள ஈட்டிய விடுப்பு காலாவதியாகிவிடும். (TNLR 24)

தகுதிகாண் பருவம் முடித்தோர் பணியின்மையால் பணி நீக்கம் செய்யப்பட்டால்  அவர்கள் கணக்கில் உள்ள விடுப்பு காலாவதியாகாது. மறுநியமனம் செய்யப்படும்போது மீளவும் கணக்கில் கொள்ளப்படும். (TNLR 25)
 
ஈட்டிய விடுப்பினை கணக்கிடும் போது வரும் மீதியை தள்ளவோ கொள்ளவோ செய்யாது அப்படியே வைத்திருந்து அடுத்து வரும் காலத்தில் கணக்கிடும் போது சேர்த்துக் கொள்ள வேண்டும். (G.O.Ms.No.1011 P & A.R dt 14.10.86).

கருத்துரையிடுக

  © என் பக்கம் செ. அருள்செல்வம் - www.arulselva.blogspot.com Thank you visit again

Back to TOP