Incentive Increments

ஊக்க ஊதிய உயர்வுகள்.
1.ஓர் இடைநிலையாசிரியர் B.Ed பட்டம் பெற்றால் அத்தகுதிக்கு ஓர் ஊக்க ஊதிய  உயர்வு ( இரண்டு ஆண்டு ஊதிய உயர்வுத் தொகைகள்) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படுகின்றது. அதன் பின்னர் M.A., M.Sc., M.Ed., போன்ற முதுகலை பட்டங்களில் ஒன்றைப் பெற்றால் அத்தகுதிக்காக மேலும் ஓர் ஊக்க  ஊதிய  உயர்வு ( இரண்டு ஊதிய உயர்வுத் தொகைகள்) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படுகின்றது.

2. இளங்கலை பட்டம் பெற்ற பின்னர் B.Ed பட்டம் பெறாமல் முதுகலை பட்டம் பெற்று அதன் பின்னர் B.Ed பட்டம் பெற்றால் ஒரே நிகழ்வில் இரண்டு ஊக்க  ஊதிய  உயர்வுகள் ( நான்கு   ஊதிய உயர்வுத் தொகைகள்) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படுகின்றது.

3. இவ்வூதிய உயர்வுகள் உரிய தேர்வுகள் எழுதி முடித்த நாளுக்கு மறுநாள் முதல் வழங்கப்படுகின்றன.
4. அண்ணாமலை பல்கலைகழகத்தின் திறந்த நிலைப் பல்கலைகழகத் திட்டத்தில் (Open University System) வழங்கப்பெறும் பட்டங்கள் அனைத்தும் அப்பல்கலைகழகத்தின் முறையான திட்டத்தின் (Regular Stream) வழங்கப்பெறும் பட்டங்களுக்கு சமமானவையாகக் கருதி பொதுப் பணிகளில் வேலை வாய்ப்புக்கு அரசு ஏற்ப்பளிப்பு (Recognition) செய்துள்ளது. அரசு மடல் 1630/R/97-1 (சீரமைப்பு) நாள்  20.2.97 மற்றும் அரசாணை எண்.216 /நிலை/ ப.ம.சீ.துறை/நாள் 26.8.97 

கருத்துரையிடுக

  © என் பக்கம் செ. அருள்செல்வம் - www.arulselva.blogspot.com Thank you visit again

Back to TOP